×

55,982 போலி சிம்கார்டுகள் விற்பனை செய்த விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் 5 விற்பனையாளர்கள் கைது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 55,982 போலி சிம்கார்டுகள் விற்பனை செய்த விவகாரத்தில், மாநிலம் முழுவதும் 12 வழக்குகள் பதிவு செய்து 5 விற்பனையாளர்களை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.தேசிய சைபர் க்ரைம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான போலியான சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம்க்கு அறிக்கை ஒன்று அனுப்பியது. அந்த அறிக்கையின் படி, மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் உத்தரவுப்படி சைபர் க்ரைம் எஸ்பி தேவராணி, ஸ்டாலின், அசோக் குமார் ஆகியோர் கொண்டு குழு விசாரணை நடத்தியது.

அதில், போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிம்கார்டுகள் விற்பனை செய்து இருப்பதும், இது தொடர்பாக ஒன்றிய தொலைத்தொடர்பு துறை முக அடையாளம் காணும் மென்பொருளை பயன்படுத்தி தரவுகளை ஆய்வு செய்த போது, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 55,982 சிம்கார்டுகள் போலியான முகவரி மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலி முகவரி மூலம் 55,982 சிம்கார்டுகள் விற்பனை செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து 55,982 சிம்கார்டுகளை மாநில சைபர் க்ரைம் போலீசார் முடக்கினர். மேலும், இந்த சிம் கார்டுகள் விற்பனை செய்ததாக விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிம்கார்டுகளை விற்பனை செய்ததாக தனித்தனியாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து போலி சிம்கார்டுகள் விற்பனை செய்ததாக 5 சிம்கார்டு விற்பனையாளர்களை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து மாநிலை சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 55,982 போலி சிம்கார்டுகள் விற்பனை செய்த விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் 5 விற்பனையாளர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...