×

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சரக்கு வாகனம் சாலையில் பழுதடைந்து போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சரக்கு வாகனம் சாலையில் பழுதடைந்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் சின்னக்கடை விதி அருகே சூலூர் சாலை சந்திப்பில் 100 அடி நிலம் கொண்ட சரக்கு வாகனம் ஒன்று பழுதடைந்து நின்று கொண்டிருந்தது, இதனால் ஸ்ரீபெரும்பதூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களை அவதிக்குள்ளாகினர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சகா ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் வரவழைத்து வாகனத்தை சேரி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்பதூர் நுழைவாய்வில் முதல் சூலூர் சந்திப்பு சாலை, அதே போல் திருவள்ளுர் சாலை சந்திப்பில் இருந்து 6 கிலோ மீட்டர் வரை பேருந்துகள் கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்று கொண்டிருக்கின்றன.

திருவள்ளூர் சாலை மாறும் ஸ்ரீபெரும்புதூர் நகரம் என 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் அவரசத்துக்குக்கூட ஆம்புலன்ஸ் செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டு வருகின்றது. தற்போது வரை கனரக வாகன மெக்கானிக் அந்த பழுதடைந்த லாரியை சரிசெய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சரக்கு வாகனம் சாலையில் பழுதடைந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District Sripurudur ,Kanchipuram ,Kanchipuram district ,Sripurudur ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சிக்கான...