×

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக 13 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்

கெய்ரோ: சூடானில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைகளுக்கும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில் 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கபட்டது. இதையடுத்து மற்ற நாட்டினர் சூடானில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சண்டையால் 190 குழந்தைகள் உள்பட 863 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. உணவு பொருட்களுக்கும் கடுமையாக பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 3ல் ஒரு பங்கு மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போரில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஜோர்டானில் இருந்து போர்ட் சூடானுக்கு விமானம் மூலம் இந்த மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள், தங்கள் உடமைகளை பறிகொடுத்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். சுமார் 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்திருப்பதாக ஐநா புலம் பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

The post சூடானில் உள்நாட்டு போர் காரணமாக 13 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Sudan ,Cairo ,Indians ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...