×

தமிழ் மொழி நமது மொழி, உலகின் பழமையான மொழி; இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி: பிரதமர் மோடி புகழாரம்.!

டெல்லி: உலகின் பழமையான மொழி என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். ஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் பயணத்தை முடித்துவிட்டுபிரதமர் மோடி இன்று அதிகாலை நாடு திரும்பினார். இந்தியா திரும்பிய பிரதமருக்கு பாஜக சார்பில் டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி; பப்புவா நியூ கினியில் எனக்கு திருக்குறள் மொழிப்பெயர்ப்பு நூலை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. திருக்குறளின் மொழிபெயர்ப்பை வெளியிட்டதில் பெருமைப்படுகிறேன். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்தேன்.

கொரோனா தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏன் வழங்குகிறது என்ற எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு பதிலளித்த பிரதமர், புத்தர் மற்றும் காந்தியின் தேசமான இந்தியா, எதிரிகளின் மீதும் இந்தியா அக்கறை செலுத்தும். வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்ற தமது கருத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்த பிரதமர், ஒவ்வொரு விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; உலகின் பழமையான மொழியான தமிழ், இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி.

இந்தியாவின் மகத்தான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பற்றிப் பேசும்போது நீங்கள் அடிமை மனப்பான்மையில் மூழ்கிவிட வேண்டாம். தைரியமாகப் பேசுங்கள் என நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உலகம் கேட்க ஆவலாக இருக்கிறது. நமது புனித தலங்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என நான் கூறியபோது உலகமே என்னை ஏற்றுக்கொண்டது என கூறினார். மேலும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்கள்) காண ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் அந்நாட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

The post தமிழ் மொழி நமது மொழி, உலகின் பழமையான மொழி; இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி: பிரதமர் மோடி புகழாரம்.! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Japan ,Papua New Guinea, ,Australia ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...