×

தனது உணவகத்தை அபகரித்துவிட்டார்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி போலீசில் புகார்..!!

கோவை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பா.ஜ.க. சேவை மையம் தொடங்கியிருப்பதாக கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். வழக்கு நிலுவையில் உள்ளபோதே தனது கடையில் இருந்த பொருட்களை பா.ஜ.க.வினர் அள்ளிச் சென்றுவிட்டனர். தனது உணவகம் அபகரிக்கப்பட்டதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கோவை உள்ளிட்ட இடங்களில் பழைய சோறு டாட்காம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் அண்ணாதுரை, போலீசில் புகார் அளித்தார். கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனது உணவகத்தை அபகரித்து பா.ஜ.க. அலுவலகம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீதும் முன்னாள் பாஜக பிரமுகர் அண்ணாதுரை புகார் அளித்துள்ளார். பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளராக இருந்த அண்ணாதுரை 4 நாட்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

The post தனது உணவகத்தை அபகரித்துவிட்டார்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி போலீசில் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Akashi ,Anamalai ,BJP Cove ,J.J. G.K. ,Annamalai ,Annadurai ,BJP ,
× RELATED நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்