×

மும்பை – லக்னோ அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி: டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 7 பேர் கைது!

சென்னை: மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு (MI – LSG) இடையேயான ஐபிஎல் கிரிக்கெட்போட்டியின் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 23 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று (24.05.2023) சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான (MI & LSG) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்பேரில், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் நேற்று (24.05.2023) சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் தீவிரமாக கண்காணித்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

1. ராம்சங்கர், வ/26, த/பெ.சிவசங்கர், திருவான்மியூர், 2. கரன்ஷா, வ/37, த/பெ.மகேஷ்குமார், திருவல்லிக்கேணி, 3. ரகு, வ/27, த/பெ.ரவிச்சந்திரன், அரியலூர் மாவட்டம், 4. காதர் அலி, வ/49, த/பெ.மைதீன் பிச்சை, தென்காசி மாவட்டம், 5. ரோஹித், வ/21, த/பெ.சுரேஷ், அரும்பாக்கம், 6. மஜீஸ்வரன், வ/36, த/பெ.கணேசன், சேப்பாக்கம், 7. ஹரிசங்கர், வ/25, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 23 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட மொத்தம் 7 நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post மும்பை – லக்னோ அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி: டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 7 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : IPL ,Mumbai ,Lucknow ,Chennai ,MI ,LSG ,Dinakaran ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ