×

பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு மாடு; பொதுமக்கள் அச்சம்: வனத்துறை தீவிர கண்காணிப்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு மாட்டால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில். தற்போது காட்டு மாடுகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சேரம்பாடி வனச்சரகம் சேரம்பாடி கோரஞ்சால் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு மாடு ஒன்று நெடுஞ்சாலையில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சேரம்பாடி வனத்துறையினர் வந்து காட்டு மாட்டை கண்காணித்து வருகின்றனர். இது குறித்து ரேஞ்சர் அய்யனார் கூறுகையில், ‘எப்போதாவது காட்டு மாடு கேரளா எல்லைப்பகுதில் இருந்து இந்த பகுதிக்கு வந்து விடுகிறது. வனத்துறையினர் காட்டு மாடை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றார்.

The post பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு மாடு; பொதுமக்கள் அச்சம்: வனத்துறை தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Forest Department ,PANDALUR ,Cherambadi Koranjal ,Dinakaran ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா