×

முதுமலையில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

கூடலூர்: கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மலைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. 6 நாட்கள் நடக்கும் கணக்கெடுப்பில் 111 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜிபிஎஸ் கருவி மற்றும் புதிய செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் துல்லியமாக இந்த பணியை செய்ய முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட வனப்பகுதிகள் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதிகள் யானைகள், புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பருவமழைக்கும் முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

இந்த வருட பருவ மழைக்கு முந்தைய கண்கடுப்பு பணிகள் காலை முதல் துவங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பணியில் ஒவ்வொரு குழுவிலும் சுமார் மூன்று பேர் வீதம் 37 குழுக்களாக பிரிந்து சுமார் 111 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜிபிஎஸ் கருவி, தர்மா மீட்டர் மற்றும் இப் பணிக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட செல்போன் செயலி மூலம் இந்த வருடம் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதில், வனவிலங்குகளின் நேரடி பார்வை, எச்சம், கால் தடம், நீர் நிலைகளில் வனவிலங்கு நடமாட்டம் போன்றவற்ற வைத்து கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தன்னார்வலர்களை தவிர்த்து வனத்துறையினர் தனித்து இருந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post முதுமலையில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Mudumalai Kuddalore ,Seasonal ,Mountain Wildlife Survey ,Mudumalai Tigers ,Kuddalore ,Amatamalai ,
× RELATED தென்மேற்கு பருவ மழைக்காலத்தில்...