×

தேயிலை மூட்டைகளை பந்தாடிய ‘படையப்பா’: மூணாறு பகுதி தொழிலாளர்கள் பீதி

மூணாறு: தேயிலை மூட்டைகளை பந்தாடிய படையப்பா யானையால் மூணாறு பகுதி தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். ேகரள மாநிலம், மூணாறு முற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும். இங்கு முக்கிய தொழில் தேயிலை விவசாயம். இந்த தேயிலை விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித் திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் மூணாறு பகுதியில் படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது.

மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக உலா வருகிறது. குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயிண்ட், பாலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு தனியார் தேயிலை எஸ்டேட் கம்பெனிக்கு உட்பட்ட கிரகாம்ஸ்லண்ட் பகுதியில் நுழைந்த படையப்பா யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்த தேயிலைத்தூள் மூட்டைகளை வெளியே எடுத்து எரிந்து சேதப்படுத்தியது. இதில் 300 கிலோ தேயிலை தூள் சேதமடைந்ததாக கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர். படையப்பா யானை மீண்டும் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிவதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post தேயிலை மூட்டைகளை பந்தாடிய ‘படையப்பா’: மூணாறு பகுதி தொழிலாளர்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Thirandaru ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...