×

பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 என பதிவு : மக்கள் அச்சம்

பனாமா : மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். பனாமா-கொலம்பியா எல்லையின் அருகே உள்ள கரீபியன் கடலில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பனாமாவின் போர்டோ ஒபால்டியாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.

The post பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 என பதிவு : மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Panama-Colombia ,Panama ,Central American ,
× RELATED வெளிநாட்டு கப்பல் ‘கைது’ ஒடிசா ஐகோர்ட் உத்தரவு