×

தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியது..!!

குமரி: தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், குமாரபுரம், முப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான காற்றாலைகள் உள்ளன. அண்டை மாவட்டமான நெல்லை மாவட்டத்திலும் காற்றாலைகள் அதிக அளவில் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மத்தியில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும் இந்த காலகட்டத்தில் தான், காற்றாலைகளில் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி ஆகும். தற்போது தென்மேற்கு பருவக்காற்று மாவட்டத்தில் வீச தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளிலும், இதர மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. சராசரியாக தற்போது 1500 முதல் 2000 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகளில் உற்பத்தியாகி வருகின்றது. இந்த காற்றாலை மின் உற்பத்தி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் வரையிலும் நீடிக்கும்.

காற்றின் வேகம் அதிகரிக்கும் நிலையில் 4000 மெகாவாட் முதல் 4500 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தியாகும் என்று காற்றாலை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே காற்றாலையில் மின் உற்பத்தி போதிய அளவில் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்கு இந்த மின் உற்பத்தி தொடர்ந்து இருக்கும் என்று காற்றாலை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kanyakumari district ,Southwest Seasonal Threat ,
× RELATED திருப்பத்தூரில் 107 டிகிரி வெப்பம் பதிவு