சேலம்: ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நடைபெற்ற படகு போட்டியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21ம் தேதி தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான மலர்களால் பறக்கும் டிராகன், பொன்னியின் செல்வன் கப்பல் உள்ளிட்ட மலர் சிற்பங்களை காண நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா, பெங்களூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோடை விழாவையொட்டி ஏற்காடு ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், தம்பதியர், உள்ளூர் வாசிகள், படகு இல்ல ஊழியர்கள் மற்றும் ஊடகத்துறையினர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் இரட்டையர்களுக்கான போட்டியில் புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த பெண்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
The post கோடை விழாவையொட்டி ஏற்காடு ஏரியில் படகுப் போட்டி; ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.
