சென்னை: வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 25மாவட்டங்களுக்கு ஏற்கனவே அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் 12மாவட்டங்களில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்-அருண் ராய், கோவை-ஜெயஸ்ரீ முரளிதரன், கள்ளக்குறிச்சி-பிரதீப் யாதவ், காஞ்சிபுரம்-செந்தில்குமார், நாகை- ரமேஷ்சந்த் மீனா, நாமக்கல் குமரகுருபரன், புதுக்கோட்டை- நாகராஜன், ராமநாதபுரம்- நந்தகுமார், ராணிப்பேட்டை ஷில்பா பிரபாகர் சதீஷ், சேலம்-சங்கர், திருப்பத்தூர்- ககன்தீப் சிங் பேடி, திருப்பூர் விஜயகுமார் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
The post வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.