×

மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

மன்னார்குடி, மே 25: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் சரகத்திற்குட்பட்ட பெரு விடைமருதூர் வடக்கு தெருவை சேர்ந் தவர் கோப்பெருந்தேவி (30). இவரது கணவர் பிரபாகரன் மலேசியாவில் வேலை பார்த்து வருவதால் மாமியார் வீட்டில் தனது மகன் நிதிசுடன் (7) வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கோப்பெருந்தேவி வீட்டில் துணிகளை அயன் செய்து கொண்டிருந் தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். இது குறித்து பெருக வாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Thiruvarur District Perugajivanthan Police Station ,Peru Vidyamarudhur North Street ,Kopperundevi ,
× RELATED மன்னார்குடி, கூத்தாநல்லூரில் வருவாய்...