×

மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

காரைக்கால், மே 25: மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணை மகளிர் கள் 26 நபர்கள் கலந்து கொண்டனர்.வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், நம் அன்றாட உணவில் கணிசமான அளவு காளான் சேர்த்துக் கொள்ள வேண்டும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இப்பயிற்சியின் மூலம் தங்களது வீடுகளில் சிறிய அளவில் காளான் உற்பத்தி குடில் அமைத்து, அதன் மூலம் தங்களுக்கு தேவையான வருமானத்தை ஈட்டி கொள்ள வேண்டும் என்றார்.

வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் திவ்யா பயிற்சியில் காளான் வகைகள், காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்களான காளான் வித்து தயார் செய்யும் முறைகள், காளான் படுக்கை தயார் செய்தல் போன்றவை பயிற்சியில் தெளிவாக விளக்கினார். காளான் படுக்கை தயார் செய்யும் முறை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது..

The post மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Cultivation Training ,Mathur Agricultural Science Station ,Karaikal ,Mathur ,Agricultural Science ,Centre ,Karaikal District… ,Mathur Agricultural Science Center ,Dinakaran ,
× RELATED 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை...