×

நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகும். நாடாளுமன்றக் கட்டிடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்திருக்க வேண்டும். அல்லது அவரது தலைமையில் இவ்விழாவை நடத்தியிருக்க வேண்டும்.

அதுதான் ஜனநாயக மாண்புகளைக் காக்கும் மரபாகும். ஆனால், அதனைப் புறக்கணித்து அவரது பெயரைக் கூட அழைப்பிதழில் குறிப்பிடாமல் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் நோக்கில் நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெறுகிறது. ஒன்றிய பாஜ அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன், இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம்: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Chennai ,President of the Republic ,Parliament Building ,
× RELATED பொதுமக்கள் அளிக்கும் இந்த வரவேற்பு,...