×

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோலை பிரதமர் நிறுவுகிறார்: தெலங்கானா கவர்னர் தமிழிசை பாராட்டு

சென்னை: தெலங்கான கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீதி வழுவாத ஆட்சி முறையின் அடையாளமே செங்கோல். அன்றைய தமிழர்களின் நீதிபரிபாலன முறை உலகத்திற்கே வழிகாட்டக் கூடியதாக அமைந்திருந்தது. திருக்குறளில் வரும் ‘செங்கோன்மை’ அதிகாரம் தமிழர்களின் நீதி வழுவாத ஆட்சி முறையையும் நிர்வாகத்தையும் அழகாக எடுத்து உணர்த்தும். அதனால் தான் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, நாட்டின் அரசாட்சி ‘நீதி வழுவாமல் இருக்க வேண்டும்’ என்பதற்கு அடையாளமாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இரவு அன்றைய பிரதமருக்கு செங்கோல் கைமாற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் திருவாடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த பொரியோர்களால் செய்யப்பட்ட செங்கோல் வழங்கப்பட்டது என்பது தமிழர்களின் சிறப்பு. அன்றைய நிகழ்வைப் பின்பற்றி, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி, புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வரும் மே 28ம் நாள் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் செய்யப்பட்ட, தமிழர்களின் நீதி பரிபாலன முறையின் அடையாளமான செங்கோலை நிறுவுகிறார் என்பது தமிழர்களுக்கு பெருமை. அதற்காக பிரதமருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோலை பிரதமர் நிறுவுகிறார்: தெலங்கானா கவர்னர் தமிழிசை பாராட்டு appeared first on Dinakaran.

Tags : PM ,Tamils ,Tamil Nadu ,Governor of Telangana ,soundrarajan ,Telangana ,Governor ,Dinakaran ,
× RELATED தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40...