×

இந்த ஆண்டு இடம் தேர்வு; இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார் ஆலை: எலான்மஸ்க் அறிவிப்பு

சான்பிரான்சிஸ்கோ: இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். டெஸ்லா மற்றும் டிவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் புதிய தொழிற்சாலை அமைக்க இடம் தேடிக்கொண்டு இருக்கிறார்.

இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் எலான் மஸ்க்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது; டெஸ்லா நிறுவனத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு புதிய கார் தொழிற்சாலைக்கான இடம் தேர்வு செய்யப்படும். அப்போது எங்கள் முதல் தேர்வு இந்தியாவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்த ஆண்டு இடம் தேர்வு; இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார் ஆலை: எலான்மஸ்க் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tesla ,Elon Musk ,San Francisco ,India ,Elanmusk ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்