×

வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஆன்லைன் ஆப் மூலம் ரூ.4,000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு

புதுடெல்லி: வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஆன்லைன் கேமிங் இணையதளங்கள் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு ஆன்லைன் கேமிங் ஆப் தொடர்பான அலுவலகங்கள் உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தியது. இந்த ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் குராக்கோ, மால்டா, சைப்ரஸ் போன்ற சிறிய தீவு நாடுகளில் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

ஆனால் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் போலி பெயரில் இந்தியாவில் திறக்கப்பட்டு இருந்தன. இதன்மூலம் இறக்குமதி செய்வதற்கான கட்டணங்கள் என்ற போர்வையில், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பெயரில் சுமார் ரூ. 4,000 கோடி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத பணப்பறிமாற்றம், பெமா விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 55 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

The post வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஆன்லைன் ஆப் மூலம் ரூ.4,000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,New Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை விசாரணை ஜார்க்கண்ட்...