×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை;பா.ஜ அமைச்சர் வீடு உடைப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதில் அமைச்சர் வீடு உடைக்கப்பட்டது.மணிப்பூரில் இருசமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் 100 பேர் பலியாகி விட்டனர். ராணுவம் குவிக்கப்பட்டு கலவரம் அடக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலவரம் வெடித்து உள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் பா.ஜவை சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் கொந்தோஜாம் கோவிந்தாஸ் வீட்டை கலவரக்காரர்கள் உடைத்து சூறையாடினர் அப்போது வீட்டில் யாரும் இல்லை. அடித்து உடைத்தவர்களின் பெரும்பாலானோர் பெண்கள். இந்த கலவரத்தில் முதன்முறையாக அமைச்சர் வீடு தாக்கப்படுவது இதுவே முதல்முறை.

மேலும் சாருசந்த்பூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதிக்கு நேற்று கிழக்குப்பகுதி ராணுவ கமாண்டர் லெப்டினெட் ஜெனரல் ஆர்பி கலிதா சென்று பார்வையிட்டார். மேலும் ஏராளமான ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். நிலைமை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை;பா.ஜ அமைச்சர் வீடு உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,BJP ,minister ,Imphal ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...