×

காங்கிரசில் இருந்து மாஜி எம்எல்ஏ நீக்கம்

மும்பை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட மாஜி எம்.எல்.ஏ. அஷிஷ் தேஷ்முக் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். மாநில காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவான் இதற்கான கடிதத்தை அஷிஷ் தேஷ்முக்கிற்கு அனுப்பி வைத்தார்.இவர் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ரஞ்ஜித் தேஷ்முக்கின் மகனாவார். பாஜ. எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

மோடி பெயரை ராகுல் தவறாக பயன்படுத்தியதால் மன்னிப்பு கேட்கவேண்டும், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஷிண்டேயுடன் கைகோர்த்து செயல்படுகிறார் என்பது உள்பட கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இது தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றதால், 6 ஆண்டுகளுக்கு பின் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

The post காங்கிரசில் இருந்து மாஜி எம்எல்ஏ நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Maji ,Congress ,Mumbai ,Maji M. l. ,PA ,Ashish Deshmukh ,Congress Party ,Maji MLA ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு