×

மீண்டும் டாப்-10ல் போபண்ணா

துபாய்: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் ரோகன் போபண்ணா (43), இரட்டையர் பிரிவு தரவரிசையில் மீண்டும் டாப்-10ல் இடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் முடிந்த இத்தாலி ஓபன் உட்பட, நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள போபண்ணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மார்ச்சில் நடந்த 1000 தரவரிசைப் புள்ளிகளுக்கான ஏடிபி இண்டியன்வெல்ஸ் தொடரில் ஆஸி.யின் மாத்யூ எப்டெனுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆண்டு தொடக்கத்தில் 19வது இடத்தில் இருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு முடிந்த இத்தாலி ஓபன் போட்டிக்கு முன்பு 11வது இடத்தில் இருந்தார். அந்தப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறினார். அதனால் 2 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 9வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாப்-10ல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2016ல் 3வது இடம் பிடித்ததே அவரது அதிகபட்ச ரேங்க் ஆகும்.

The post மீண்டும் டாப்-10ல் போபண்ணா appeared first on Dinakaran.

Tags : Bopanna ,Dubai ,Rogan Bopanna ,Dinakaran ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் ரோகன் – எப்டன்