×

வன்முறை பாதித்த மணிப்பூரில் தாறுமாறாக எகிறிய விலைவாசி

இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டீஸ், நாகா குக்கி சமூகத்தினரிடையே கடந்த 3ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் வன்முறை வெடித்தது. இதில் 54 பேர் பலியாகினர். நிலைமை சீரானதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது. இதனிடையே, பிஷ்னுபூர் மாவட்டத்தின் மொய்ராங் பகுதியில் இளைஞர்கள் நேற்று ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் முகாமில் தங்கியிருந்த இளைஞர் தொய்ஜாம் சந்திரமணி முதுகில் குண்டு துளைத்து உயிரிழந்தார்.

இந்நிலையில், முட்டை, அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி மணிப்பூரில் கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.900 ஆக இருந்த 50 கிலோ அரிசி மூட்டை ஒன்றின் விலை ரூ.1800 ஆகவும், ரூ.20 ஆக விற்ற வெங்காயத்தின் விலை ரூ.30 ஆகவும் உருளைக்கிழங்கு கிலோ ரூ.100க்கும் விற்கப்படுகிறது. இதே போல, வழக்கமாக ரூ.180க்கு விற்கப்படும் 30 முட்டைகள் கொண்ட அட்டை ஒன்றின் விலை தற்போது ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு ரூ.1,800, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.170 ஆக விற்பனையாகிறது. போராட்டத்தினால் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

The post வன்முறை பாதித்த மணிப்பூரில் தாறுமாறாக எகிறிய விலைவாசி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Meiteis ,Naga Kuki ,
× RELATED ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர்...