×

கன்னத்தில் சிறுவன் அடித்ததில் 6ம் வகுப்பு மாணவன் பலி?

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனூரை சேர்ந்தவர் அன்பழகன் மகன் துரை சரவணன்(12). 6ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த நண்பனான 12 வயது சிறுவனுடன் நேற்று மதியம் வீட்டில் கேரம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையில் விளையாட்டு தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த நண்பன், துரை சரவணன் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதில் மயங்கி விழுந்தவரை பெற்றோர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் துரை சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே துரை சரவணன் உடல் நலம் குன்றி இருந்ததும் தெரிய வந்தது. எனவே சந்தேக மரணம் என்ற நிலையில், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கன்னத்தில் சிறுவன் அடித்ததில் 6ம் வகுப்பு மாணவன் பலி? appeared first on Dinakaran.

Tags : Vellore ,Anbazagan ,Durai Saravanan ,Senur ,Katpadi ,Vellore district ,Dinakaran ,
× RELATED வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில்...