×

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி நாளை புதுகை வருகை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு, கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (25ம் தேதி) வருகிறார். சிவகங்கையில் இருந்து நாளை மதியம் காரில் வரும் அவர், புதுக்கோட்டை ரோசா இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதைதொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அமைச்சர்கள் சட்டத்துறை ரகுபதி, சுற்றுச்சூழல் துறை மெய்யநாதன், கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதைதொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு ஆலங்குடியில் கட்சி நிர்வாகி இல்ல வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் கீரனூரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு செல்லபாண்டியன் தந்தை கண்ணன் இறப்பு குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறுகிறார். இதைதொடர்ந்து அங்கிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார். இதைதொடர்ந்து விமானத்தில் சென்னை சென்றடைகிறார். சிவகங்கையில் இருந்து காரில் வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு புதுக்கோட்ைட மாவட்ட எல்லையான சவேரியார்புரத்தில் மதியம் 12.15 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதைதொடர்ந்து 12.35 மணிக்கு ஊனையூர் விளக்கு, 12.40 மணிக்கு பெல், 12.45 மணிக்கு கடியாபட்டி விளக்கு, 12.55 மணிக்கு திருமயம் விளக்கு, 1.05 மணிக்கு சண்முகநாதன் பொறியியல் கல்லூரி, 1.20 மணிக்கு லேணா விளக்கு, 1.25 மணிக்கு டோல்கேட், 1.35 மணிக்கு நமணசமுத்திரம் கடைவீதி, 1.40 மணிக்கு ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி, 1.50 மணிக்கு புதுக்கோட்டை நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு திருவரங்குளம், இரவு 7.30 மணிக்கு கட்டியாவயல், 7.45 மணிக்கு திருவேங்கை வாசல், 8 மணிக்கு முத்துடையான்பட்டி, 8.10 மணிக்கு நார்த்தாமலை, 8.45 மணிக்கு நல்லூர், 9 மணிக்கு மாத்தூரில் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

The post பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி நாளை புதுகை வருகை appeared first on Dinakaran.

Tags : Minister Udhayanidhi ,Pudhavu ,Pudukkottai ,Pudukkotta ,Minister ,Udhayanidhi ,Budha ,Dinakaran ,
× RELATED 145வது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில்...