- Tiruvilli
- ஆண்டார் கோயில் செரு
- திருவில்லிபுத்தூர்
- செரு
- ஆண்டாள்
- கோவில்
- கோரோட்டம்
- விருதுநகர் மாவட்டம்
- ஆண்டல் கோயில் செரு நாள்
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில், ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, தேருக்கு நாள் செய்யும் விழா இன்று காலை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த தினமான பூரம் நட்சத்திரத்தில், தேர்த்திருவிழா நடைபெறும். இந்தாண்டு தேரோட்டம் வருகிற ஜூலை 14ம் தேதி கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து 22ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இதையொட்டி தேருக்கு நாள் செய்யும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில், ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நாள் செய்யும் விழாவை முன்னிட்டு இரண்டு பந்தல் கால்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டாள் கோயில் அர்ச்சகர்கள் இந்த சிறப்பு பூஜைகளை நடத்தினர். இது குறித்து அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, ‘தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை நாள் செய்யும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேரோட்டத்திற்கு தேரை அலங்கரிக்கும் பணிகள் துவங்கும். தேருக்கு நாள் செய்யும் விழாவில் பெரிய தேர் மற்றும் செப்புத்தேர் 16 சக்கரதேர் ஆகிய தேர்களுக்கும் சேர்த்து நாள் செய்யப்பட்டது’ என தெரிவித்தார்.
The post திருவில்லி.ஆண்டாள் கோயில் தேருக்கு நாள் செய்யும் விழா appeared first on Dinakaran.