×

தமிழ்நாட்டில் ரூ.312 கோடி முதலீடு செய்யும் சிங்கப்பூர் Hi-P நிறுவனம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office – SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office – SIPO) மற்றும் தமிழ்நாட்டின் FameTN மற்றும் Startup TN நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன், இ,ஆ,ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் திரு. பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post தமிழ்நாட்டில் ரூ.312 கோடி முதலீடு செய்யும் சிங்கப்பூர் Hi-P நிறுவனம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Singapore Hi-P Company ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Singapore ,Minister ,M.K. ,Stalin ,Tamil Nadu Skill Development Corporation ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின்...