×

வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: வெல்டர் கைது

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பருவன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). வெல்டரான இவரது மனைவி, கடந்த 50 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போனார். சதீஷ்குமாரின் வீட்டருகே அவரது சித்தப்பாவின் 20 வயது மகள் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த வாரம் வெளியூர் சென்று விட்டு பெற்றோர் வீடு திரும்பியபோது, தனியாக இருந்த மகளை சதீஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து அவர்கள் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடினர். நேற்று குஞ்சாண்டியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சதீஷ்குமாரை கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட, தங்கை உறவு முறை பெண்ணை அண்ணனே பலாத்காரம் செய்த சம்பவம், மேட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: வெல்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettur ,Satish Kumar ,Baruan Street, Gunjandiyur ,Mettur, Salem district ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு