×

ராமநாதபுரம் துறைமுகங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு..!!

ராமநாதபுரம்: மீன்பிடி விசைப்படகுகளில் அதிக குதிரைத்திறன் கொண்ட எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய விசைப்படகு துறைமுகங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது படகுகளின் தரம், உறுதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா, அதிக திறன்கொண்ட எஞ்சின்கள் பொறுத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்வர்.

படகு உரிமையாளர்களின் பெயர், படகின் பதிவு சான்று, மீன் பிடி உரிமம், காப்பீடு உரிமம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர். இந்த தடை காலத்தில் அனைத்து விசைப்படகு களும் கடலில் இருந்து கரைக்கு ஏற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும். தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் மீனவர்கள் படகுகளை சரிபார்ப்பது வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

The post ராமநாதபுரம் துறைமுகங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Harbors ,Fisheries ,Ramanathapuram ,Fisheries department ,Dinakaran ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...