×

கலெக்டர், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் விவிபிஏடி இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விவிபிஏடி இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரபெற்ற விவிபிஏடி இயந்திரங்களை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் நேற்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்ததாவது:இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1,000 எண்ணிக்கையிலான விவிபிஏடி(வாக்களிப்பு சரிபார்ப்பு இயந்திரம்) இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி நேற்று அனுப்பி வைக்கப்பட்ட விவிபிஏடி இயந்திரங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறை திறக்கப்பட்டு விவிபிஏடி இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், ஆர்டிஓ முருகேசன், தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post கலெக்டர், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் விவிபிஏடி இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,District Collector ,Mercy Ramya ,Dinakaran ,
× RELATED 1,560 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 7,648 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு