×

நீலகிரியில் மழை பெய்து வருவதால் மலைப்பாங்கான பகுதியில் விவசாய பணிகள் மும்முரம்

ஊட்டி : நீலகிரியில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், மலைப்பாங்கான பகுதிகளிலும் விவசாயம் செய்யவும், பணிகளை துவங்கவும் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளிலும் விவசாயம் மேற்கொள்ளப்படும். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மழை குறைந்து விடும். இச்சமயங்களில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.

இச்சமயங்களில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் இன்றி குளங்கள், குட்டைகள் மற்றும் கிணறுகள் வற்றி விடும். இதனால், விவசாயிகள் ஐந்து மாதங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்வதை தவிர்த்து விடுவார்கள். தண்ணீர் உள்ள பகுதிகளிலும் மட்டுமே விவசாயம் மேற்கொள்வார்கள். ஆனால், இம்முறை கடந்த 2 மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் காணப்படுகிறது. இந்த நீரை பயன்படுத்தி தற்போது மலைப்பாங்கான பகுதிகளிலும் வேளாண் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

The post நீலகிரியில் மழை பெய்து வருவதால் மலைப்பாங்கான பகுதியில் விவசாய பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்