×

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!!

சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கை திசைதிருப்புவதற்காகத்தான் தொழில் முதலீடு பெற்று வேலை வாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உருவாக்க சென்றுள்ள முதலமைச்சருடைய வெளிநாடு பயணம் என அவதூறு பரப்பும் பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்தார். முதலீட்டை ஈர்க்கபோகிறாரா அல்லது முதலீடு செய்யபோகிறாரா என்றும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதலமைச்சர் சென்றுள்ள 9 நாள் வெளிநாட்டு பயணத்தை கொச்சை படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியவர் தான் எடப்பாடி பழனிசாமி என்றும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 4 ஆண்டுகால ஆட்சியில் ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்துக்கு சொந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி, வெளிப்படைத் தன்மையோடு நடைபெறும் திமுக ஆட்சி மீது ஊழல் புகார் கூற பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது என தமிழ்நாடே கேள்வி கேட்கிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் எத்தனையோ தின்றால் பித்தம் தெளியும் என்று முதன் முதலில் டாஸ்மாக் கடையை தெருவெல்லாம் திறந்த அதிமுக ஆட்சியை மறந்து விட்டு, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய சாவுகள் வசதியாக மறைத்து 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா என தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியது தான் எடப்பாடி ஆட்சி திமுகவை குறைகூறுவதா என்றும் கேள்வி எழுப்பினார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முதலீடு பெறப்போகிறார் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஒரு நாள் பேரணியை நடத்தி சட்ட ஒழுங்கு சீர்குலைவு என அரைவேக்காடு புகாரையும் அவர் கொடுத்திருக்கிறார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கடத்திய போது வாயைமூடி கொண்டிருந்தவர் பழனிசாமி. அமைதியாக அறவழியில் போராடிய ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகள் போல சுட்டுத்தள்ளி நான் டிவியில் தான் பார்த்தேன் என்று சொன்னவர் பழனிச்சாமி. துறையெங்கிலும் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களை வேடிக்கை பார்த்தவர் பழனிசாமி என்பது வரலாறு என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி சூடு எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தே நடந்தது என்பதை துப்பாக்கி சூடு பற்றி விசாரணைக்காக நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷனே அறிவித்திருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை உண்மைக்கு மாறாக செய ல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் சென்றிருக்கக்கூடிய நிதி திரட்டலை கொச்சை படுத்தும் விதமாக அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.

இது ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பேரணி, புகார் அறிக்கை என நீலகண்ணீர் வடிப்பதாகவும், முதலீடு என்றால் தனக்கு கிடைக்கும் மூல பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிச்சாமி தமிழ்நாட்டினுடைய தொழில் வளர்ச்சிக்கு தேவையான முதலீடு பெறப்போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசிவருகிறார். அந்த அளவிற்கு பொறாமையும், எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலைவிட அனலான கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடு பயணங்களுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் போனது பழனிசாமியினுடைய ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குதான என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

இதேபோல விபத்தில் முதலமைச்சரான அவர் அப்பதவியை தக்கவைத்து நடத்திய கூவத்தூர் குத்து, அங்கு நடந்த அருவருப்பான நடனங்கள், எம்.எல்.ஏக்கள் சுவர் ஏறி தப்பி ஓடும் காட்சிகள், ஆம்னி பேருந்துகளில் அடைத்து எம்.எல்.ஏக்களை கொண்டு சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அனைவருக்கும் கரன்சி பெட்டிகளை கொடுத்து, தங்கக்கட்டிகளையும் கொடுத்தார் என்ற செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் படித்ததை அவர் மறந்துவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் திராவிட மாடல் முதலமைச்சரை பற்றி குறைகூற பழனிசாமிக்கு தகுதியும் இல்லை தார்மீக உரிமையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றும் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் மட்டுமல்ல பழனிசாமி ஊழல் மீதும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும், நீதிமன்ற படிக்கட்டுகளை என்ன வேண்டியவர்கள் தங்களது ஆட்சி ஊழலை மறைக்க இது போன்ற அவதூறு பரப்பும் வேளைகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் தெரிவித்தார். பழனிசாமி பாணியில் நாங்கள் பேச தொடங்கினால் ஒரு நாள் கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்து அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

The post முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chief Minister ,Chennai ,Minister Thangam ,South ,AIADMK ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...