×

200 கிலோ கடல் அட்டை கடலுக்கு அடியில் பதுக்கல்-மண்டபம் மரைன் போலீசார் மடக்கினர்

மண்டபம் : மண்டபத்தில் கடலுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ரோந்து பணியில் மரைன் போலீசார் ஈடுபட்டனர். மரைன் எஸ்ஐ யாசர் மவுலானா தலைமையிலான போலீசார், மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முனைக்காடு பகுதியில் கயிறால் கட்டப்பட்ட தெர்மகோல் மிதந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், கயிற்றை இழுத்து பார்த்தபோது கடலுக்கு அடியில் சாக்கு மூட்டைகள் இருப்பதை பார்த்தனர். சந்தேகத்தின்பேரில் சாக்கு மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்தபோது 9 மூட்டைகளில் 200கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கடல் அட்டைகளை பதுக்கி வைத்த கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post 200 கிலோ கடல் அட்டை கடலுக்கு அடியில் பதுக்கல்-மண்டபம் மரைன் போலீசார் மடக்கினர் appeared first on Dinakaran.

Tags : Padukkal- ,Mandapam Marine Police ,Mandapam ,Dinakaran ,
× RELATED மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்