×

லோடு ஆட்டோ-பைக் மோதல் வடமாநில தொழிலாளி பரிதாப சாவு

 

பொன்னமராவதி, மே 24: பொன்னமராவதியில் லோடு ஆட்டோ, பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உம்ரேஷ் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(34). இவர் பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் பகுதியில் உறவினர்களுடன் தங்கியிருந்து கட்டிடப் பணி செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை கட்டிடப் பணிக்காக சக தொழிலாளி ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ஹரிபாபுவுடன் பைக்கில் சென்றபோது பொன்னமராவதி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே, எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியதில் தலையில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே மகேந்திரன் உயிரிழந்தார். உடன் வந்த ஹரிபாபு பலத்த காயமடைந்தார்.

அவரை பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லோடு ஆட்டோ ஓட்டிவந்த நாகராஜ் காயமுற்று வலையபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன் உடலை மீட்டு வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post லோடு ஆட்டோ-பைக் மோதல் வடமாநில தொழிலாளி பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : North state ,Ponnamaravati ,North ,
× RELATED சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு..!!