×

தரங்கம்பாடி அருகே இலுப்பூர் சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

 

செம்பனார்கோயில், மே 24: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் 27ம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி பூச்சொறிதலுடன் காப்பு கட்டி விழா துவங்கியது. இதனை தொடர்ந்து தினம்தோறும் அம்மனுக்கு கிராம வாசிகளால் அபிஷேக ஆராதனையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்று வந்தன. 8ஆம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழாவை முன்னிட்டு சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க விரதமிருந்த பக்தர்கள் சக்தி கரகம், அலகு காவடி, பால் காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.

தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் ஆட்டம், பச்சகாளி, பவளக்காளி ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post தரங்கம்பாடி அருகே இலுப்பூர் சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Dimithi festival ,Ilupur Sitaladevi Mariamman temple ,Tharangambadi ,Sembanarkoil ,Sitaladevi Mariamman temple ,Ilupur ,Mayiladuthurai district ,Ilupur Sitaladevi Mariamman Temple Dimithi festival ,
× RELATED கெங்கையம்மன் கோயில் தீமிதி விழா