×

திரிணாமுல் எம்பி. மொய்த்ரா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

புதுடெல்லி: ஷரவன் குமார் யாதவ் என்பவர் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு அனுப்பிய புகாரில், “திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்பி மகுவா மொய்த்ரா, தேர்தல் ஆணையத்துக்கு அளித்த பிரமாண பத்திரத்தில் பங்குகள், கடனீட்டு பத்திரங்களில் முதலீடு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் தனியார் நிதி நிறுவனத்தில் 4,900 பங்குகள் (49%) வைத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஒன்றிய அரசின் நேரடி வரிகள் ஆணையத்துக்கும் மொய்த்ரா வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கடிதம் அனுப்பி உள்ளார்.

The post திரிணாமுல் எம்பி. மொய்த்ரா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Moitra ,Election Commission ,New Delhi ,Sharavan Kumar Yadav ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Trinamool Congress ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் எம்.பியிடம் அமலாக்கத்துறை விசாரணை