×

ரஷ்ய உள்துறை அமைச்சர் சவுதி அரேபியா பயணம்

துபாய்: சவுதி அரேபியாவில் 32வது அரபு லீக் மாநாடு கடற்கரை நகரமான ஜெட்டாவில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 22 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் சிறப்பு விருந்தினராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீறி உக்ரைன் போரை நேர்மையான பார்வையுடன் அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் ரஷ்யாவின் உள்துறை அமைச்சர் விளாடிமிர் கோலோகோட் சேவின் ரியாத் சென்றுள்ளார். ரஷ்ய அமைச்சரின் இந்த பயணமானது அரபு நாடுகள் பாரம்பரியமாக தங்களது அமெரிக்கா, உக்ரைன் போருக்கு மத்தியிலும் தங்களது உறவை பராமரித்து வருகிறது என்பதை காட்டுகின்றது. சவுதி உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல்லாசிஸ் பின் சவுத்தை, ரஷ்ய அமைச்சர் விளாடிமிர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உள்துறை அமைச்சகங்களுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இரு நாட்டின் நலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

The post ரஷ்ய உள்துறை அமைச்சர் சவுதி அரேபியா பயணம் appeared first on Dinakaran.

Tags : interior minister ,Saudi Arabia ,Dubai ,32nd Arab League Conference ,Jetta ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...