×

சில்லி பாயின்ட்…

 

* 2023 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 அணிகள் 2 பிரிவுகளாக களமிறங்குகின்றன. ஏ பிரிவு: ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா. பி பிரிவு: இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஒமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
* தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா தகுதி பெற்றார். சிங்கப்பூரின் வோங் ஜின் ரூவுடன் மோதிய மனிகா 11-9, 14-12, 11-4, 11-8 என்ற செட் கணக்கில் வென்றார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : 2023 World Cup ODI ,Zimbabwe ,Dinakaran ,
× RELATED இலக்கை தீர்மானி வெற்றியை வசப்படுத்து