×

ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்

கொள்ளிடம்: சீர்காழி கோயிலுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நேற்று கருப்புக்கொடி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் இன்று (24ம்தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில் ேநற்று மாலை 7ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று பிற்பகல் 3.50 மணி அளவில் சிதம்பரம் வழியாக காரில் வந்தார். அரசூர் ரவுண்டானா பகுதியை ஆளுநரின் கார் கடந்தது. அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் விஜய் உட்பட சிலர் திடீரென ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 6 பேரை கைது செய்தனர். அவர்களது பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

The post ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Kollidam ,Marxist Communist Party ,Governor RN Ravi ,Sirkazhi ,Governor ,Ravi ,Dinakaran ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கக்கோரி தொடர் முழக்க போராட்டம்