×

சேலம் அருகே அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் தாத்தா, பேரன் படுகாயம்

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் முருகன். இவர் அங்குள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக பேரன் மோனிஷ்சுடன் சென்றுள்ளார். இதையடுத்து பொருட்களை வாங்கிய பின் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார்.

அப்போது அதிவேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் அவர்கள் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பிடித்து தொளசம்பட்டி போலீசாரிடம் ஒப்படைப்படைத்தனர். தொளசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் அருகே அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் தாத்தா, பேரன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Murugan ,Tholechambati ,Omalur, Salem District ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில்...