×

பெண்ணுக்கு அரசுப்பணி வாங்கி தருவதாக கூறிய மாஜி எம்எல்ஏ, சகோதரர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் வழக்கு: 4 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் எட்டா மாவட்டம் ஜெய்த்ரா காவல் நிலையத்தில் 25 வயதுடைய தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரில், ‘கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராமேஷ்வர் யாதவ் என்பவரது இல்லத்திற்கு வேலை கேட்டு சந்திக்க சென்றேன். கல்வித்துறையில் எனக்கு கடைநிலை ஊழியர் பணி வழங்குவதாக அவர் கூறினார்.

அதுவரை தனது வீட்டில் வேலை செய்யும்படி கூறினார். அரசுப்பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது வீட்டில் வேலை செய்ய ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து அவரது வீட்டிற்கு தினமும் வேலைக்கு சென்று வந்ேதன். அவ்வாறு அவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவர் என்னை அவரது அறைக்கு இழுத்துச் சென்றார். அங்கு அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் என்னையும் என் குடும்ப உறுப்பினர்களையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். பாதிக்கப்பட்ட நான், அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு, ராமேஸ்வரின் சகோதரர் ஜோகேந்திரனிடம் நடந்த சம்பவத்தையும் சொன்னேன். அவர் எனக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர் என்னை கொடூரமாக தாக்கினார். என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு, அவர்களின் பிடியில் இருந்து தப்பினேன். எனவே முன்னாள் எம்எல்ஏ மற்றும் அவரது சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் ஏஎஸ்பி தனஞ்சய் சிங் குஷ்வாஹா கூறுகையில்:
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்எல்ஏ ராமேஸ்வர் மற்றும் அவரது தம்பி ஜோகேந்திர யாதவ் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 376, 354-பி, 323, 504, 506 மற்றும் எஸ்சி எஸ்டி-யின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இருவர் மீதும் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவை’ என்று கூறினார்.

The post பெண்ணுக்கு அரசுப்பணி வாங்கி தருவதாக கூறிய மாஜி எம்எல்ஏ, சகோதரர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் வழக்கு: 4 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Maji MLA ,Agra ,Jaitra ,police station ,Uttar Pradesh ,Etta district ,
× RELATED நீ திரும்ப, திரும்ப சொல்ற…...