×

நன்னாரி சிரப்..!!

தேவையானவை:

நன்னாரி வேர் 50 கிராம்
தண்ணீர் 1 1/2 லிட்டர்
சர்க்கரை 1 1/2 கிலோ
லெமன் சால்ட் 1/2 ஸ்பூன்

செய்முறை:

நன்னாரி வேரை நன்றாக தண்ணீரில் அலசி கழுவ வேண்டும். அதன்பின்பு மிக்ஸி ஜாரில் இந்த வேரை போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். (நன்றாக அரைக்க வேண்டாம். ஒன்றும் இரண்டுமாக பொடி செய்து கொண்டால் போதும்.) அரைத்து வைத்திருக்கும் 50 கிராம் நன்னாரி வேரை முதல் நாள் இரவே 1 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அதாவது குறைந்த பட்சம் 8 மணி நேரம் தண்ணீரில், வேர் ஊற வேண்டும்.
அதன்பின்பு ஊற வைத்திருக்கும் வேரில் இருந்து நீரை மட்டும் வடிகட்டி, எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த நன்னாரி வேர் நீரை, 1 1/2 கிலோ சர்க்கரையில் ஊற்றி, நன்னாரி வேர் தண்ணீரில், சர்க்கரையானது நன்றாக கரைந்த பின்பு அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் மட்டும் மிதமான தீயில் காய்ச்சவேண்டும். இறுதியாக அரை ஸ்பூன் லெமன் உப்பை சேர்த்து அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட வேண்டும். நன்றாக ஆறிய பின்பு, இறுதியாக ஒருமுறை வடிகட்டி விட்டால் போதும். உங்களுக்கு தேவையான சிரப் தயாராகிவிடும். இந்த சிரப்பை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு வருடத்திற்கு கெட்டுப் போகாது. இதனை சர்பத்தாக அல்லது பழச்சாறுகளில் என எப்படி வேண்டுமானாலும் கலந்து பயன்படுத்தலாம்.

நன்னாரி பயன்கள்

உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படுகிறது. 3. உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை குளிர்ச்சியாக்கும் தன்மை உடையது. பச்சை நன்னாரி வேரை ஊறவைத்து அந்த நீரை குடித்து வர பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி, சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். ஆண்மையை பெருக்கும், பெண்களின் மாதவிடாய் கால பிரச்னைகளை தீர்க்கும்.

The post நன்னாரி சிரப்..!! appeared first on Dinakaran.

Tags : Nannari ,Dinakaran ,
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்