×

வீட்டில் துணிகர கொள்ளை

ஆவடி: அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரம் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(54), அம்பத்தூர் மண்டல தூய்மை பணியாளர். இவரது மனைவி வசந்தி (49). நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் வீட்டின் முன்கதவை சரியாக பூட்டாமல் இருந்துள்ளது. பின்னர், நேற்று காலை சிவபிரகாசம் எழுந்துள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்துகிடந்தது. மேலும், அதிலிருந்த 5 சவரன் நகைகள், 50 ஆயிரம், 2 செல்போன்கள் கொள்ளைபோயிருந்தது. தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி  கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடுகின்றனர்….

The post வீட்டில் துணிகர கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Sivaprakasam ,Kalyanapuram Rajivkanthi Street ,Ampathur ,Ampathur Zone ,Vasanthi ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல்...