×

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவு வெறும் எரிசக்தி, பொருளாதாரம் சார்ந்தது அல்ல; நம்பிக்கை மரியாதை அடிப்படையிலானது: பிரதமர் மோடி பேச்சு

மெல்போர்ன்: பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் முதல் பகுதியாக, கடந்த கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். இதில், ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதன்பின்னர், பல்வேறு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி விரிவாக பேசினார். ஜப்பான் நாட்டுக்கான 3 நாள் பயணம் நிறைவடைந்த பின்னர் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவுக்கு கடந்த 21-ந்தேதி புறப்பட்டு சென்றார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் 2-வது பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வரவேற்றார். சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு இருவரும் சென்றனர்.

அதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி:
2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு நான் வந்தபோது, உங்களுக்கு நான் ஒரு வாக்குறுதி வழங்கினேன். இந்திய பிரதமர் ஒருவருக்காக நீங்கள் 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்காது என கூறினேன். அதனால், சிட்னி நகரில் நான் மீண்டும் வந்துள்ளேன். இதற்கு முன்பு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் உறவுகள் 3 C-க்களை கொண்டு வரையறுக்கப்பட்டன. அவை காமன்வெல்த், கிரிக்கெட் மற்றும் கரி ஆகியவை ஆகும்.

அதன்பின்பு, நமது உறவு 3 D-க்களை கொண்டு வரையறுக்கப்பட்டது. அவை, ஜனநாயகம், வம்சாவளியினர் மற்றும் நட்பு ஆகியவை ஆகும். சிலர் நமது உறவுகள், எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை சார்ந்து உள்ளது என கூறினர். ஆனால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உறவானது, அதற்கும் மேற்பட்டது என நான் நம்புகிறேன். அது பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலானது என கூறியுள்ளார்.

The post இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவு வெறும் எரிசக்தி, பொருளாதாரம் சார்ந்தது அல்ல; நம்பிக்கை மரியாதை அடிப்படையிலானது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Australia ,PM Modi ,Melbourne ,Modi ,Japan ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!