×

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தினார் எல்லைப் பாதுகாப்புப் படையினர்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதிக்கு உட்பட்ட இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக போதைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பறந்து வந்த ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினர்.

சர்வதேச எல்லை பகுதியில் பஞ்சாப் வழியே இந்தியாவுக்குள் போதை பொருளை கொண்டுவந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த நான்கு நாட்களில் இது போன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது. கீழே விழுந்த கருப்பு நிற டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அளவில் பெரியதாகவும், கருப்பு நிறத்திலும் இருந்த டிரோனில் சந்தேகத்திற்குரிய போதை மருந்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

மே 19 ஆம் தேதி முதல் இந்திய எல்லைக்குள் இதே போன்று அத்துமீறி நுழைந்த ஐந்தாவது டிரோன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பல சமயங்களில் டிரோன் பறந்து வருவது போன்ற சத்தம் மட்டும் கேட்கும். ஆனால் விசாரணையில் டிரோன் எதுவும் மீட்கப்படாத சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. ஏற்கனவே இரண்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்றாவது டிரோன் ஊடுறவ முயன்ற போது சுட்டதில், அது பாகிஸ்தான் எல்லை பகுதியில் வீழ்ந்தது என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி ஊடுறவிய டிரோனில் 3.3 கிலோகிராம் போதை பொருள் இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

The post இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தினார் எல்லைப் பாதுகாப்புப் படையினர் appeared first on Dinakaran.

Tags : Amritsaras ,Punjab ,India-Pakistan International Border ,Border Security Forces ,Indian border ,Dinakaran ,
× RELATED பஞ்சாப்பில் அமிர்தசரஸ் -டெல்லி ரயில்...