×

ஜனநாயகத்தை காப்பாற்றும் போராட்டம்: ஆதரவு கேட்டு பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் கெஜ்ரிவால்..!

டெல்லி: பாஜக ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் பயணத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்குகிறார். டெல்லியில் 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதிலிருந்தே டெல்லி அரசின் முடிவுகளில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாகத் தலையிட்டு வருகிறது. இதனால் ஒன்றிய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் இருக்க வேண்டும்.

டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் டெல்லியின் அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கும் அவசரச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் பயணத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்குகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; “உச்சநீதிமன்றம் பல ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரவு ஒன்றை பிறப்பித்து டெல்லி மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்தது. ஆனால், ஒன்றிய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்து அதனை பறித்துவிட்டது.

மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது என அனைத்து கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர இருக்கிறேன். இந்தப் போராட்டமானது டெல்லி மக்களானது மட்டுமல்ல, இது இந்திய ஜனநாயகத்தையும், பாபா சாகிப் வழங்கிய அரசியல் சட்டத்தையும், நீதித்துறையையும், இந்த நாட்டையும் காப்பாற்றும் போராட்டம்; இதற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஜனநாயகத்தை காப்பாற்றும் போராட்டம்: ஆதரவு கேட்டு பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் கெஜ்ரிவால்..! appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,BJP ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால...