×

திருவாரூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலை வளைவுகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்காக நெடுஞ்சாலைகளில் இருந்து வரும் வளைவுகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு கூட்டமானது நெடுஞ்சாலைத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 16ம்தேதி அமைச்சர் ஏ.வ.வேலு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் அதிக வளைவுகள் இருப்பதன் காரணமாக விபத்துக்கள் நடப்பதாகவும் இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு ஏற்ப வளைவு சாலைகள் அனைத்தும் நேர் சாலைகளாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலைகளில் இருபுறமும் எதிரொலிபான் மற்றும் வெள்ளை கோடு போன்றவை அமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு உத்தரவிட்டார். இதனையடுத்து தற்போது நாகையிலிருந்து திருவாரூர் வழியாக தஞ்சை வரையில் இருந்து வரும் நெடுஞ்சாலையில் எதிரொலிப்பான் மற்றும் வெள்ளை கோடுகள் மற்றும் வளைவுகளில் இரும்பு தகடுகள் அமைக்கும் பணி போன்றவை நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் நடைபெற்று வருகிறது.

The post திருவாரூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலை வளைவுகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Tiruvarur ,Tiruvarur district ,
× RELATED திருவாரூர் அருகே பரபரப்பு: பயங்கர...