
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- காரைக்கால்
- வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
சென்னை; தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸாக இருக்கும். தமிழகத்தில் அதிகபட்சமாக சிற்றாறு-9, வால்பாறை-8, சிவலோகம், மேல்கூடலூரில் தலா 6 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
வெப்ப சலனம் காரணமாக, 23.05.2023 முதல் 27.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
25.05.2023 முதல் 27.05.2023 வரை மன்னார் வளைகுடா மற்றும் தமிழக ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் 26.05.2023 மற்றும் 27.05.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள்.
The post தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.