×

உக்ரைன் ரத்தக்களரியானதை உணர்த்த சிவப்பு சாயத்தை ஊற்றினார்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்ணின் செயலால் பரபரப்பு

பாரிஸ்: ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் ரத்தக்களரியானதை உணர்த்தும் விதமாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் திடீரென சிவப்பு நிறத்திலான திரவத்தை உடல் முழுவதும் ஊற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உக்ரைன் மீதான ரஷ்ய படையின் தாக்குதலை கண்டித்து உச்சி மாநாடு திரைப்பட விழாக்கள் முன்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸில் நடைபெற்று வரும் 76-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக உக்ரைனிய தேசிய கோடி நிறத்தில் உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வந்த பெண் ஒருவர் திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை எடுத்து உடலில் ஊற்ற ஆரம்பித்தார்.

இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்ட நிலையில் அங்கு வந்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் தியரி ஃப்ரீமாக்ஸ் கடந்த வாரம் பேசும் போது உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தார். இதேபோன்று திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் பிரான்ஸ் நடிகை கேத்ரின் டேனியோ உக்ரைன் கவிஞர் லெஸ்யா உக்ரைன்கா எழுதிய ஹோப் என்ற கவிதையை வாசித்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

The post உக்ரைன் ரத்தக்களரியானதை உணர்த்த சிவப்பு சாயத்தை ஊற்றினார்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்ணின் செயலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Cannes Film Festival ,Paris ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு