×

கொட்டும் மழையிலும் மலர் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி : ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் ேம மாதங்காளில் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பது வழக்கம். இம்முறை கடந்த மார்ச் மாதம் முதலே ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இம்முறை வழக்கம் போல், காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவியப் பொருட்களின் கண்காட்சி மற்றும் கோடை விழா ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதி துவங்கியது.

மலர் கண்காட்சியை முன்னிட்டு 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மயில் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 70 ஆயிரம் மலர்களை கொண்டு சிறுத்தை, டால்பின்ஸ், பாண்டா கரடி, பட்டாம் பூச்சி, காண்டா மிருகம், புறா, வரையாடு, பணை மரம், நடனமங்கை, செங்காந்தல் மலர், செல்பி ஸ்பாட் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஊட்டி 200, தாவரவியல் பூங்கா துவக்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆன நிலையில், ஊட்டி கார்டன் 175 அலங்காரம் மற்றும் 125வது பிளவர் ஷோ போன்ற மலர் அலங்காரம் பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாள் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்து காணப்பட்ட போதிலும், இரண்டாம் நாளான சனிக்கிழமை முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

ஊட்டியில் தற்போது தற்போது மழை பெய்து வருகிறது. நேற்றும் பிற்பகல் 12 மணிக்கு துவங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

The post கொட்டும் மழையிலும் மலர் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Nema Monthangal ,Dinakaran ,
× RELATED சாதிக்க துடிக்கும் பெண்கள்...